அள்ளுதே! இந்த WEEK END- அ தியேட்டரில் என்ஜாய் பண்ண, ரிலீசான திரைப்படங்கள்! முழு லிஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாடு: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான முக்கிய படங்கள் குறித்த பார்வை

this week theater release indian movies full list

ஹே சினாமிகா

துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹே சினாமிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நேற்று மார்ச் 3-ம் தேதி வெளியாகி உள்ளது. திருமணத்துக்கு பிந்தைய உறவை மையப்படுத்தி நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ளார். இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்துள்ளன.

this week theater release indian movies full list

இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சேட்டிலைட் உரிமையை கலர்ஸ் டிவி கைப்பற்றி உள்ளது. மேலும் ஒடிடி உரிமையான டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த படத்திற்கு ப்ரீத்தி ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். கார்க்கி கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ராதா ஸ்ரீதர் எடிட்டராக பணியாற்றுகிறார்.

பேட் மேன் (2022)

டிசி காமிக்ஸின் பேட்மேன் திரைப்படம் இன்று (04.03.2022) வெளியாகி உள்ளது. ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  மேட் ரீவ்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். கிறிஸ்டியன் பேல், பென் அப்ஃலெக்  நடித்த பேட்மேன் கதாபாத்திரத்தில் முதல்முறையாக ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ளார்.

this week theater release indian movies full list

this week theater release indian movies full list

பீஷ்ம பர்வம் (மலையாளம்)

மெகாஸ்டார் மம்மூட்டி நடிப்பில், கடைசியாக 'ஒன்' என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, அமல் நீரத் இயக்கத்தில், 'பீஷ்ம பர்வம்' திரைப்படம் நேற்று (03.03.2022) ரிலீசாகி உள்ளது. அமல் நீரத் இயக்கிய முதல் திரைப்படமான 'Big B'யில் மம்மூட்டி தான் கதாநாயகனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, 'பீஷ்ம பர்வம்' என்னும் திரைப்படத்தின் மூலம், இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

this week theater release indian movies full list

இந்த படத்தை அமல் நீரத் தனது சொந்த அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் கீழ் இந்த படத்தை  தயாரித்துள்ளார்.தேவதாத் ஷாஜி, அமல் நீரத் ஆகியோருடன் இணைந்து எழுதிய பீஷ்ம பர்வம் கேங்க்ஸ்டர் டிராமா வகைமையில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சவுபின் ஷாஹிர், நதியா மொயுடு, ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, ஃபர்ஹான் ஃபாசில், வீணா நந்தகுமார், அனேகா, அனசூயா, மாலா பார்வதி மற்றும் லீனா ஆகியோர் மம்முட்டியுடன் நடித்துள்ளனர்.

 

ஜுகுந்த் (இந்தி)

அமிதாப் பச்சன் நடிப்பில் நாகராஜ் மஞ்சுலே இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே இந்திய சினிமாவில் மிகத்தரமிக்க படமான பன்ரி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இன்று இந்த படம் ரிலீசாக உள்ளது.

this week theater release indian movies full list

மற்ற செய்திகள்

This week theater release indian movies full list

People looking for online information on Amitabh Bachchan, BAT MAN, Bheeshama Parvam, DQ, Hey Sinamika, Jhund, Mammotty will find this news story useful.