"அடங்காத” ஜர்னலிஸ்ட்டாக தனுஷ்… அரசியல்வாதி சமுத்திரக்கனி – மாறன் டிரைலர் சொல்லும் கதை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் இப்போது பல படங்கள் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக அவரின் ரிலிஸாக வருகிறது மாறன் திரைப்படம். துருவங்கள் 16 மற்றும் மாஃபியா ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேனுடன், தனுஷ் இணைந்துள்ள படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

Never bending journalist dhanush clash with politicians in maaran

Never bending journalist dhanush clash with politicians in maaran

மார்ச் 11- ல் ஓடிடியில் மாறன்:

தனுஷை வைத்து தொடர்ச்சியாக படங்களை தயாரித்துவருகிறது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம். அந்த வரிசையில் உருவாகியுள்ள மாறன் படத்தில் தனுஷோடு மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்கி மற்றும் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் மார்ச் 11 ஆம் தேதி ரிலிஸ் ஆகிறது. இந்த படத்தில் தனுஷ் நேர்மையான இளம் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளன.

Never bending journalist dhanush clash with politicians in maaran

Never bending journalist dhanush clash with politicians in maaran

டிரைலர் சொல்லும் கதை :

சில தினங்களுக்கு முன்னர் வெளியான டிரைலர் கவனத்தை ஈர்த்த நிலையில் அந்த ட்ரைலரிலேயே படத்தின் கதையை மேலோட்டமாக ரசிகர்களுக்கு சொல்லியுள்ளனர் படக்குழுவினர். நேர்மையான இளம் பத்திரிக்கையாளராக இருக்கும் தனுஷ் தன் திறமையால் மேலும் மேலும் வளர, அவர் மேற்கொள்ளும் ஒரு அரசியல் சம்மந்தமான செய்தியால் அரசியல் வாதியான சமுத்திரக்கனி பாதிக்கப்பட்டு அவரின் அரசியல் செல்வாக்கு பறிபோவதாக தெரிகிறது.

Never bending journalist dhanush clash with politicians in maaran

Never bending journalist dhanush clash with politicians in maaran

அதனால் வஞ்சம் கொண்ட அவர் தனுஷை பழிவாங்க துடிக்க அவரை சமாளித்து தன் சாமார்த்தியத்தால் எப்படி வெல்கிறார் என்பதே கதை போன்று தோன்றுகிறது. ஏற்கனவே தனுஷோடு வேலையில்லா பட்டதாரி மற்றும் வடசென்னை போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ள சமுத்திரக்கனி இந்த படத்தில் தனுஷோடு நேருக்கு நேர் மோத உள்ளார். இருவருமே தங்கள் நடிப்புத் திறமைக்காக ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்கள் என்பதால் படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.

அடுத்த ஓடிடி ரிலிஸ்:

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு அண்மையில் அக்ஷய் குமாருடன் இணைந்து தனுஷ் நடித்த கல்யாண கலாட்டா படம் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியானது. இதனைத் தொடர்ந்து தனுஷின் அடுத்த ஓடிடி ரிலீஸ் படமாக மாறன், வரும் மார்ச் 11-ல் வெளியாகிறது.

Tags : Test

Never bending journalist dhanush clash with politicians in maaran

People looking for online information on Test will find this news story useful.