ரஜினிகாந்தை சந்தித்த சிவகார்த்திகேயன்!

முகப்பு > செய்திகள் > வணக்கம் சென்னை
By |

சென்னை :

ரஜினிகாந்தை சந்தித்த சிவகார்த்திகேயன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடித்த டான் திரைப்படம் மே 13ந் தேதி அன்று திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று, இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது.

 

டான்

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவானத் திரைப்படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன், இவர்களுடன் சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, மிர்ச்சி விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்த படத்தில் கல்லூரி மாணவராக கலகலப்பான தோற்றத்தில் வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

பாராட்டிய ரஜினி

நல்ல படங்களையும், படத்தில் பணியாற்றிய குழுவினரையும் எப்போதும் பாராட்ட தவறாத சூப்பர் ஸ்டார், அட்லீயிடம் அசோசியேட்டாக பணியாற்றிய அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'டான்' படத்தை பார்த்துவிட்டு "சூப்பர், மிக நல்ல நடிப்பு. 30 நிமிடங்களாக என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை" என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்து இருந்தார்.

 

 

 

மற்ற செய்திகள்