ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை துவங்கிய செல்வராகவன்

முகப்பு > செய்திகள் > வணக்கம் சென்னை
By |

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது நானே வருவேன் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார் செல்வராகவன். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை துவங்கிய செல்வராகவன்

இந்நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்து தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக செல்வராகவன் அறிவித்தபடி ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் பாதியளவு நிறைவடைந்துள்ளதாக அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த 3 படங்கள் ஓடிடியில் ரிலீசாகியுள்ளன. இதையடுத்து அவரது நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதனிடையே அவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி படத்தின் சூட்டிங்கிலும் கலந்து கொண்டுள்ளார்.

நானே வருவேன் படம் இதனிடையே அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படமும் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

செல்வராகவன் அடுத்தப்படம்:

இயக்குநர் செல்வராகவன் நானே வருவேன் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவரது இயக்கத்தில் உருவாகும் படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர் ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ள நிலையில் இந்தப் படத்தை அவர் அடுத்ததாக இயக்குவாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 

சோழ தேசத்தை நோக்கிய பயணம் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் நடிகர் கார்த்தி, ஆன்டிரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். சோழ தேசத்தை நோக்கிய அவர்களின் பயணம் படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கும். இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. ஆனால் வசூல்ரீதியாக படம் வெற்றியை கொடுக்கவில்லை.

பாதியளவு முடிந்த ஸ்கிரிப்ட் வேலைகள் ஆயினும் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன், இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை பாதியளவிற்கு நிறைவடைந்துள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் கால்ஷீட் முக்கியம் ஆனால் இந்தப் படத்தை துவங்குவதற்கு நடிகர் கார்த்தியின் கால்ஷீட்டும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், விரைவில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்குவதும் நடிகர் கார்த்திதான் அதில் ஹீரோவாக நடிப்பார் என்பதும் உறுதியாகியுள்ளது. நானே வருவேன் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குவாரா அல்லது இடையில் வேறு படத்தை இயக்குவாரா என்பதே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

விரைவில் அறிவிப்பு விரைவில் செல்வராகவன் இதுகுறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் மற்றும் சாணிக் காயிதம் இவருக்குள் இருக்கும் நடிகரை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தியுள்ளது.

நடிக்கும் வாய்ப்பு ஆயினும் செல்வராகவன் போன்ற சிறப்பான இயக்குநர், நடிப்பிற்குள் சென்றுவிட்டால் அவரிடம் இருந்து கிடைக்கக்கூடிய சிறப்பான படங்கள் குறைந்துவிடுமோ என்ற அச்சமும் அவரது ரசிகர்களிடையே நிலவி வருகிறது. ஆனால், நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்