சித்து மூஸ்வாலா கொலைக்கு திகார் ஜெயிலில் சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம்? போலீஸ் சந்தேகம்

முகப்பு > செய்திகள் > டெக்னாலஜி
By |

அமிர்தசரஸ், பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்து மூஸ்வாலா. பிரபல பஞ்சாபி மொழி பாடகரான இவர், சமீபத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியின் முன்னணி தலைவராக செயல்பட்டு வந்த இவர் சட்டசபை தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் மான்சா மாவட்டத்தில் நேற்று இவர் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த சித்து மூஸ்வாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்து உள்ளனர். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளார். இந்த கொலைச் சம்பவத்தில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளி லாரன்ஸ் பிஷ்நோயை ரிமாண்டில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தக்கொலைக்கான சதித்திட்டம் திஹார் சிறையில் வைத்து தீட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.

 

சித்து மூஸ்வாலா கொலைக்கு திகார் ஜெயிலில் சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம்? போலீஸ் சந்தேகம்

மற்ற செய்திகள்