‘என்ன அம்மா வீடு திறந்து கிடக்கு’.. உள்ளே சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ஷாக்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் டி.ஜி அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி நிர்மலா. இவரது கணவர் வெளியூரில் உள்ள தங்களது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதனால் நிர்மலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர்களது வீட்டின் அருகிலேயே மூத்த மகன் சந்தோஷ் ராஜ் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சந்தோஷ் ராஜின் வீட்டு கதவு வெளிப்புறமாக பூட்டி இருந்துள்ளது. காலை எழுந்ததும் வீடு வெளிப்பக்கம் பூட்டி இருப்பதை அறிந்த அவர், வேகமாக கதவை தட்டியுள்ளார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து விட்டுள்ளனர். அப்போது தனது தாயின் வீட்டுக்கதவு திறந்து இருப்பதைப் பார்த்த அவர், வேகமாக சென்றுள்ளார்.
அப்போது அவரது தாய் நிர்மலா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவரது தாயின் அருகே ஒரு மரச்சட்டமும் கிடந்துள்ளது. இதனை அடுத்து இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அருகில் உள்ள சிசிடிவி கேமாரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் நிர்மலாவின் வீட்டுக்குள் நுழைவதும், சுமார் 1 மணிநேரம் கழித்து ஒரு பையுடன் வெளியே வருவதுமாக பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்