மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு, ரசிகர்களுக்கு சிம்பு கொடுக்கும் சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிம்பு தற்போது மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின் செம குஷியாக இருக்கிறார். மாநாடு படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிம்பு பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இப்போது, சிம்பு-கௌதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான் மூன்றாவது முறையாக இணையும் "வெந்து தணிந்தது காடு" படத்தின் Glimpse "Journey of Muthu" என்ற பெயரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வழக்கமான கௌதம் மேனன் படமாக இல்லாமல் இது சற்று வித்தியாசமாக தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற படங்களை விட இப்படம் வேறுபட காரணம், இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன்பு அங்காடித்தெரு, நான் கடவுள்,பாபநாசம் போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். சிம்புவின் அடுத்த படமான கொரோனா குமார் படத்தின் அப்டேட்கள் வருகின்றன.
மற்ற செய்திகள்