நடிகர் அருண் விஜய் சமீபத்தில் வெளியான 'தடம்' படத்தில் கவின், எழில் என இரட்டை வேடங்களில் சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதனையடுத்து அவர் Behindwoods Gold Medals 2019 விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவருக்கு சிறந்த நடிகருக்கான ஜூரி அவார்டு அவருக்கு வழங்கப்பட்டது. அதனை நடிகர் ஜெயம் ரவி வழங்கினார். விழாவில் பேசிய அருண் விஜய் , என்னை அறிந்தால் படத்துக்காக பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் விருது Behindwoods விருது கிடைத்தது. அதற்கு பிறகு 'தடம்' படத்துக்காக எனக்கு கிடைத்திருக்கிறது.
தடம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் மகிழ் திருமேனி சார். தடையற தாக்க படம் பண்ணோம். ஆனா அந்த படம் எங்கேயோ கமர்ஷியலா மிஸ் ஆச்சு. என் வாழ்க்கையில நான் தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்த போது, துவண்டு போகமாக அந்த வெறியை என் தொழிலில் காண்பித்தேன். அந்த உழைப்பு தான் என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது.
ஒரு விஷயத்தை நாம அடையணும்னு நினைக்கும் போது நிறைய விஷயங்கள் பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரும். ஆனா அந்த கோபத்தை,வலியை நம்முடைய தொழில் காட்டுங்க. நிச்சயம் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்'' என்றார்.