காஞ்சிபுரம்: தமிழக டிஜிபி நேர்மையாக இருந்தால் பாஜக கொடுத்த 300 புகாரின் மீது நடவடிக்கை எடுத்தால் முதலில் பாராட்டுவது நானாகத்தான் இருப்பேன் என பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இதன் பின் தனியார் திருமண மண்டபத்தில் வாரணாசியில் நடைபெற்ற விழா ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட தொண்டர்களும் கலந்துகொண்டு விழாவை கண்டுகளித்தார்.
இதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில் , டிஜிபி சைலேந்திர பாபுவின்ஸ கடந்த காலத்தை நன்கு அறிந்தவன் நான். தற்போது டிஜிபி யை பணி செய்ய விடவில்லை என்பது தெளிவாக புரிகிறது. அவரின் பின்புறத்திலிருந்து ஒரு சக்தி இயக்கி வருகிறது. பாஜகவினர் 22 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் புகார்தாரர் யார் என்று பார்த்தால் திமுகவின் தொழில் நுட்ப அணி என்பது தெரியவருகிறது. பாஜகவின் அளித்த 300 புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க டிஜிபி தயாராக இருந்தால் அதை முதலில் வரவேற்பது நானாகத்தான் இருப்பேன். மேலும், திமுக காலத்தில் தான் ஆணவக் கொலை அதிகமாகிவிட்டது. திமுக கட்சியினர் நாட்டின் தலைவர்களை விமர்சனம் என்ற பெயரில் விஷத்தை கக்கிக் கொண்டிருகிறார்கள்' என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், சேகர்பாபுவின் கடந்த காலத்தை தமிழக மக்கள் அறிவார்கள். நேர்மையாக கேள்வி இருந்தால் பதிலும் நேர்மையாகவே இருக்கும்.
திமுக காங்கிரஸ் எம்பிக்கள் வேலை அற்றவர்கள்" இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் பாபு காஞ்சிபுரம் நகர செயலாளர் எலக்ட்ரிகல் ஜீவானந்தம், அதிசயம் குமார், அமைப்புசாரா மாநிலத் துணைத் தலைவர் கணேஷ் உள்ளிட்ட பாஜக வினர் கலந்து கொண்டனர்.