கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் ரூ4 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
முகப்பு > செய்திகள் > Worldபுதுடெல்லி, பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் இன்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பி.எம்.கேர்ஸ் பார் சில்ரன்ஸ் என்ற குழந்தைகள் காப்பதற்கென ஒரு புதிய திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது : பெற்றோர் வழங்கிய அன்பையும், பராமரிப்பையும் யாராலும் ஈடு செய்து விட முடியாது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இந்தியத் தாய் துணை நிற்கும்.நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் துணை நிற்கிறார்கள். தொற்றுநோய்களின் போது மருத்துவமனைகளைத் தயாரிப்பதற்கும், வென்டிலேட்டர்களை வாங்குவதற்கும், ஆக்ஸிஜன் ஆலைகளை அமைப்பதற்கும் பி.எம்.கேர்ஸ் நிதி பெரிதும் உதவியது. இதனால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். நம்மை விட்டுச் சென்றவர்கள், இன்று இந்த நிதி அவர்களின் குழந்தைகளுக்காக, உங்கள் அனைவரின் எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆயூஸ்மான் ஹெ ல்த் கார்டு மூலம் குழந்தைகள் சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் ₨4 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். கொரோனாவல் பெற்றோரை இழந்த 18 முதல் 23 வயதுடைய குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் உதவும். மாதாந்திர உதவித்தொகையுடன் அவர்களுக்கு 23 வயதாகும் போது ரூ.10 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- என் குழந்தை இங்க இருக்க வேணாம்.. பாதுக்காப்பான இடத்துக்கு கூட்டிட்டு போங்க.. மகளை கட்டியணைத்து அழுத உக்ரைன் தந்தை
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- "வலிமை சிறந்த ஆக்சன் படம்" - தேசிய விருது வென்ற சினிமா பிரபலம் செய்த டிவிட்டர் விமர்சனம்
- '300' ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- "300" ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- "செம சேட்டை புடிச்ச ஆளுப்பா இந்த ரோஹித்.." ஒரே நொடியில் எடுத்த முடிவு.. மெர்சல் சம்பவம்
- சிஎஸ்கே போட்ட பதிவு.. 'SMILEY' மூலம் கமெண்ட் செய்த 'டு பிளஸ்ஸிஸ்'.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த 'சம்பவம்'
- கர்ப்பிணி மனைவியை காணவில்லை.
- மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு, ரசிகர்களுக்கு சிம்பு கொடுக்கும் சர்ப்ரைஸ்!