என் குழந்தை இங்க இருக்க வேணாம்.. பாதுக்காப்பான இடத்துக்கு கூட்டிட்டு போங்க.. மகளை கட்டியணைத்து அழுத உக்ரைன் தந்தை
முகப்பு > செய்திகள் > தமிழகம்உக்ரைன்: உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் அங்கிருக்கும் தந்தை தன் மகளின் எதிர்காலத்திற்காக கெஞ்சும் வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவத் தாக்குதல்:
நேற்றிலிருந்து ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களில் ராணுவத் தாக்குதலைத் துவக்கியுள்ளது. உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறதுவைரலாகும் புகைப்படங்கள்:
சில இடங்களில் குண்டின் காரணமாக கட்டடங்கள் முழுவதும் புகைமூட்டத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. கியேவ் மெட்ரோ நிலைத்தில் மக்கள் பதற்றத்துடன் குழந்தைகளை சுமந்துகொண்டு அங்கும் இங்குமாக சிதறி பரபரப்பாக ஓடி வரும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
உக்ரைனில் நடந்து வரும் இந்த போரில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரேனிய தந்தை என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என அழுத நெஞ்சை உருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், உக்ரேனிய தந்தை தான் இந்த போரில் உயிருடன் இருப்போமோ இல்லையா என தெரியாத நிலையில் கடைசியாக தனது மகளை கட்டிபிடித்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்கிறார். அதோடு அந்த வீடியோவில், 'என் மகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்' என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல அரசு முயற்சி செய்து வருகிறது. உக்ரைன் மக்களும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "300" ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- "செம சேட்டை புடிச்ச ஆளுப்பா இந்த ரோஹித்.." ஒரே நொடியில் எடுத்த முடிவு.. மெர்சல் சம்பவம்
- சிஎஸ்கே போட்ட பதிவு.. 'SMILEY' மூலம் கமெண்ட் செய்த 'டு பிளஸ்ஸிஸ்'.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த 'சம்பவம்'
- கீழ எல்லாரும் நடுங்கிட்டு இருந்தப்போ.. மேடையில மட்டும் சீக்ரெட்டா ரெட் கார்பெட்டுக்கு அடியில.. சர்ச்சையான வடகொரிய அதிபர் தந்தையின் பிறந்த நாள்
- கர்ப்பிணி மனைவியை காணவில்லை.
- மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு, ரசிகர்களுக்கு சிம்பு கொடுக்கும் சர்ப்ரைஸ்!
- மாஸ்டர் பட தயாரிப்பாளர் ‘சேவியர் பிரிட்டோ’ வீட்டில் ரெய்டு ஏன்..? வெளியான பரபர தகவல்..!
- “கடவுளே...! அந்த அப்பாவி மக்களுக்கு 'இப்படியா' நடக்கணும்...?”
- வேடிக்க பாத்துட்டு நின்னுப்போ
- பத்தாம் வகுப்பு பொது தேர்வு...' 'தேர்வு கால அட்டவணையும் வெளியானது...' முழு விவரம்...!