"நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் 'நேட்டோ' அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.  எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறிய ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்துள்ளதாக தெரிவித்தது.

Advertising
>
Advertising

இதனிடையே, யாரும் எதிர்பாராத நிலையில், உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் தேதி காலையில் ரஷ்யா ராணுவ தளவாடத்துடன் தாக்குதலை தொடங்கியது. அந்நாட்டு வான்வழிக் கட்டமைப்பு முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது. மேலும் தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது. 'மக்கள் அனைவரும் பயப்படாமல் இருங்கள். நாட்டை காப்பதற்கான அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்தது.

இந்நிலைியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக  ரஷ்யர்களை நோக்கி அவர், 'நீங்கள் எதற்காக, யாருடன் சண்டையிடுகிறீர்கள்? உங்களில் பலர் உக்ரைனுக்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களுக்கு உக்ரைன் நண்பர் ஒருவர் இருப்பார். உங்களில் பலருக்கு உக்ரைனில் குடும்பம் உள்ளது. சிலர் உக்ரைனின் பல்கலைக்கழகங்களில் படித்தீர்கள்.  எங்கள் குணம் உங்களுக்குத் தெரியும். நாங்கள் எதை மதிக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். எங்கள் மக்களை நீங்கள் அறிவீர்கள். எங்கள் கொள்கைகளை நீங்கள் அறிவீர்கள். நீங்களே காரணத்தைக் கேளுங்கள்" என்று கூறியிருந்தார்.

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகள் தாக்கியதுபோல் இன்று காலை ரஷ்யா எங்களது நகரை தாக்கியது. ரஷ்யா தீய பாதையில் பயணிக்கிறது. ரஷ்யா என்ன நினைத்தாலும் உக்ரைன் விட்டுத் தராது. நாட்டைக் காக்க விரும்பும் எவருக்கும் ஆயுதம் அளிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

 

INDIA1, SEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்