தொடர் கேப்டன்ஸி சர்ச்சைகள்... கோலி குறித்து மனம் திறந்த ரோகித் சர்மா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா. இனி இந்தியாவை ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட்டுகளில் ரோகித் தான் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் விராட் கோலி, இனிமேல் கேப்டனாக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Advertising
>
Advertising

எந்த வித முன்னறிவிப்பும் இன்றி விராட் கோலி, ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தொடர்ந்து சர்ச்சை கிளம்பி வருகிறது. அதே நேரத்தில், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணிக்கு கடந்த பல ஆண்டுகளாக தலைமை தாங்கி, கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார் ரோகித். இதனால் அவரின் தலைமை, இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைத் தேடிக் கொடுக்கும் என்று வரவேற்பும் வந்து கொண்டிருக்கின்றன.

இப்படி விவாதங்கள் ஒரு பக்கம் இருப்பினும் ரோகித் சர்மா, விராட் கோலியின் தலைமைக்குக் கீழ் இந்திய அணிக்கு விளையாடியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர், ‘எப்போதும் அணியை முன்னோக்கி மட்டுமே நகர்த்திச் செல்வார் விராட் கோலி. கடந்த ஐந்து ஆண்டுகளாக விராட் கோலி கேப்டனாக இருந்த காலக்கட்டம் முழுவதிலும் அவர் தான் அணியை முன்னின்று வழி நடத்திச் சென்றுள்ளார். அனைத்துப் போட்டிகளையும் வென்று விட வேண்டும் என்கிற முனைப்பும் முயற்சியும் எப்போதும் அவரிடத்தில் இருந்தது.

அது தான் அவர் அணிக்கு எப்போதும் கொடுக்கும் செய்தியாக இருந்தது. அவருக்கு கீழ் விளையாடியது எப்போதும் மறக்க முடியாத அனுபவமாகும். நான் அவரோடு இணைந்து பல காலமாக கிரிக்கெட் விளையாடி வருகின்றேன். நான் அவரோடு இணைந்து பயணித்த ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்தேன். தொடர்ந்து அனுபிவிப்பேன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்