மின்சார வாகனம் தீப்பிடிக்காத வகையில் 'ஜிங்க் ஏர்' பேட்டரி; சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் குழு தீவிரம்
முகப்பு > செய்திகள் > Inspiringசென்னை: லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றான ஒன்றை, குறைந்த செலவில் உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி. ரசாயன பொறியியல் துறை உதவிப் பேராசிரியரான அரவிந்த் குமார் சந்திரன் மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவினர் ஈடுபட்டுள்ளனர். துத்தநாகம் பரவலாக கிடைக்கக்கூடியது என்பதால் 'ஜிங்க்-ஏர்' பேட்டரிகளில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். 'ஜிங்க்-ஏர்' பேட்டரிகள் நீரின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை என்பதால் நீண்ட ஆயுள் கொண்டவை. மேலும் நல்ல செயல்திறனை கொண்டுள்ளன. குறைவான விலையிலும் கிடைக்கும். ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் குறித்து அரவிந்த் குமார் சந்திரன் கூறுகையில், மின்சார வாகனங்களுக்கான 'ஜிங்க்-ஏர்' பேட்டரிகளுக்கு எதிர்கால மாதிரியை உருவாக்கும் பணியில் எங்கள் ஆராய்ச்சிக்குழு ஈடுபட்டுள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை சரிசெய்வதற்கான வழிகளையும் கண்டறிந்து வருகிறோம். ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் தற்போது 'ஜிங்க்-ஏர்' செல்களை உருவாக்கி, மின்சார வாகனங்களுக்கான 'ஜி'ங்க்-ஏர்' தொகுப்பாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார். ஆராய்ச்சி மாணவர் அகில் கொங்கரா கூறும்போது, எங்கள் திட்டத்தின்படி மின்சார வாகன பயனாளர்கள் 'ஜிங்க் கேசட்'களை பரிமாற்றம் செய்துகொள்ள 'ஜிங்க் ரீசார்ஜ்' நிலையங்களில் சில நிமிடங்கள் மட்டுமே செலவிடவேண்டியிருக்கும்" என்றார். ஆராய்ச்சி மாணவரான குஞ்சன் கபாடியா கூறுகையில், இந்திய சூழலுக்கு ஏற்ற வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஜிங்க்-ஏர் 'பேட்டரிகளில் நீரிய மின்பகுளி இருப்பதால் மிகவும் பாதுகாப்பானவை. மின்சார வாகனங்கள் விபத்தில் சிக்கும் மோசமான தருணங்களில் கூட இவை தீப்பிடிக்காது என்றார்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- என் குழந்தை இங்க இருக்க வேணாம்.. பாதுக்காப்பான இடத்துக்கு கூட்டிட்டு போங்க.. மகளை கட்டியணைத்து அழுத உக்ரைன் தந்தை
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- "வலிமை சிறந்த ஆக்சன் படம்" - தேசிய விருது வென்ற சினிமா பிரபலம் செய்த டிவிட்டர் விமர்சனம்
- '300' ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- "300" ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- "செம சேட்டை புடிச்ச ஆளுப்பா இந்த ரோஹித்.." ஒரே நொடியில் எடுத்த முடிவு.. மெர்சல் சம்பவம்
- சிஎஸ்கே போட்ட பதிவு.. 'SMILEY' மூலம் கமெண்ட் செய்த 'டு பிளஸ்ஸிஸ்'.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த 'சம்பவம்'
- கர்ப்பிணி மனைவியை காணவில்லை.