விண்கற்களை பூமி கடக்கும் அரிய நிகழ்வு
முகப்பு > செய்திகள் > வேடிக்கையான செய்திகள்இந்த வால் நட்சத்திரத்தின் உடைந்த பாகங்கள் டாவ் ஹெர்குலிட்ஸ் என அழைக்கப்படுகின்றன. இந்த உடைந்த பாகங்கள் மணிக்கு 1,000 விண்கற்களை மழையாக பொழிய கூடும் என சில வானியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். ஆனால், மற்றவர்கள் அதனை உறுதியாக கூறவில்லை. இதுவரை 68 துண்டுகளாக இந்த வால் நட்சத்திரம் உடைந்து உள்ளது என கூறப்படுகிறது. சரி. இந்த விண்கற்களை நாம் எப்போது காண முடியும்? என்பது பற்றி நாசா விளக்கம் அளித்து உள்ளது. மே 30ந்தேதி (இன்று) இரவில் இருந்து மே 31ந்தேதி (நாளை) அதிகாலைக்குள் வால் நட்சத்திரத்தின் உடைந்த பாகங்களை பூமி கடந்து செல்லும். இந்த பாகங்கள் மிக விரைவாக வெளியே தள்ளப்படும்போது, பூமிக்கு அருகே வந்து, எரிகல் மழையை நாம் காண கூடும். எனினும், இதனை இந்தியாவில் காண முடியாது. வடஅமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே காண முடியும். தெளிவான, இருண்ட வானில் வடஅமெரிக்க வானியலாளர்கள் டாவ் ஹெர்குலிட் மழையை காணும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். இதன்படி, கிழக்கு கடற்கரை பகுதியில் அதிகாலை 1 மணியளவிலும், மேற்கு கடற்கரையில் இரவு 10 மணியளவிலும் இதனை காண முடியும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- என் குழந்தை இங்க இருக்க வேணாம்.. பாதுக்காப்பான இடத்துக்கு கூட்டிட்டு போங்க.. மகளை கட்டியணைத்து அழுத உக்ரைன் தந்தை
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- "வலிமை சிறந்த ஆக்சன் படம்" - தேசிய விருது வென்ற சினிமா பிரபலம் செய்த டிவிட்டர் விமர்சனம்
- '300' ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- "300" ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- "செம சேட்டை புடிச்ச ஆளுப்பா இந்த ரோஹித்.." ஒரே நொடியில் எடுத்த முடிவு.. மெர்சல் சம்பவம்
- சிஎஸ்கே போட்ட பதிவு.. 'SMILEY' மூலம் கமெண்ட் செய்த 'டு பிளஸ்ஸிஸ்'.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த 'சம்பவம்'
- கர்ப்பிணி மனைவியை காணவில்லை.