இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது இளம் வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேயாதமான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இதையடுத்து இவர் அமலா பால் நடிப்பில் ஆடை படத்தை இயக்கினார். இத்திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ரைட்டராக வேலை செய்துள்ளார்.
இந்நிலையில் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். தற்போது ட்விட்டரில், தங்களின் 20 வயதில் எடுத்து கொண்ட போட்டோவை #MeAt20 என்கிற ஹாஷ்டேக்கில் பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரத்னகுமார், தனது 20 வயதில் எடுத்து கொண்ட சூப்பரான போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும், ''அப்போவே அப்படி'' என பதிவிட்டுள்ள அவர், ஆடை, டாக்டர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள விஜய் கார்த்திக் கண்ணன் இந்த போட்டோவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
#MeAt20 . Appave apdi 😁. Pic courtesy @KVijayKartik 🙏 pic.twitter.com/8KKl9zthlo
— Rathna kumar (@MrRathna) April 18, 2020